பீட்ரூட்டை அதிகம் சாப்பிட்டால்...? பக்கவிளைவுகள் உள்ளது

Report Print Printha in ஆரோக்கியம்

ஆரோக்கியமான ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளது. அந்த வகையில் நல்ல அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட்டை, சிலர் பச்சையாக, வேகவைத்து அல்லது ஜூஸாக சாப்பிடுவார்கள்.

இனிப்பு சுவையுடைய பீட்ரூட்டில் பல சத்துக்கள் உள்ளது என்று பலரும் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.

ஆனால் இந்த பீட்ரூட்டை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒருசில பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

பீட்ரூட்டை அதிகம் சாப்பிடுவதன் பக்கவிளைவுகள்?
 • பீட்ரூட் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தால், உடலினுள் குறிப்பிட்ட உலோகங்களான காப்பர், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை தேங்க ஆரம்பிக்கும்.
 • பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பவராக இருந்தால் உடலில் கால்சியத்தின் அளவு குறைந்து, அதன் விளைவாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
 • பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் தீங்கு விளைவிக்கக் கூடியவை. எனவே கர்ப்பிணிகள் பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸை குடிக்காமல் இருப்பதே நல்லது.
 • பீட்ரூட் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தால், தற்காலிகமாக குரல் நாண்களில் இடையூறு ஏற்பட்டு, பேச முடியாமல் போகலாம்.
 • வயிற்றுப் போக்கை நிறுத்தும் பீட்ரூட் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தால், அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும்.
 • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பீட்ரூட் ஜூஸை பயன்படுத்தும் போது, அது கல்லீரலில் ஏராளமான டாக்ஸின்களை தேக்கி, கல்லீரலை நச்சுமிக்கதாக மாற்றிவிடும்.
 • சிலர் பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்கும் போது, வாந்தியுடன், உடல் பலவீனத்தையும் உணர்வார்கள். அதனால் உடல் பலவீனமாக இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
 • பீட்ரூட் ஜூஸ் குடித்தவுடன், உடலினுள் நடக்கும் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையினால், சிலருக்கு லேசான காய்ச்சல் வரும்.
 • காய்ச்சலைப் போன்றே, அரிப்பு ஏற்படுவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதாலும் சிலருக்கு அரிப்பு ஏற்படலாம்.
 • பீட்ரூட் ஜூஸ் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் குறைவான ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.
யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸை குடிக்கக் கூடாது?
 • ஹீமோகுரோமடோடிஸ் பிரச்சனை இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸைக் குடிப்பதாக இருந்தால் கவனம் தேவை. ஏனெனில் அதனால் உடலில் இரும்புச்சத்தின் தேக்கம் அதிகமாகிவிடும்.
 • சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
 • சகிப்புத்தன்மை குறைவாக இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸைக் குறைவாக குடிக்கலாம். இல்லையெனில் தொடர்ச்சியான வாந்தி பிரச்சனையை சந்திக்கக் கூடும்.
 • உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், பீட்ரூட் ஜூஸைக் குடிக்கக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers