எப்போதும் இளமையா இருக்கனுமா? அப்ப இதை கொஞ்சம் சாப்பிட்டா போதுமே

Report Print Raju Raju in ஆரோக்கியம்

எல்லாருக்குமே இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஒருவரது வயது அதிகரிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் இளமையைத் தக்க வைக்க முடியும்

இதற்காக பெண்கள் ஆன்டி-ஏஜிங் க்ரீம்கள், மாஸ்க்குகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் ஒரே வழி உணவுகளின் மூலம் இளமையைத் தக்க வைப்பது தான்.

குறிப்பிட்ட சில உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலே இளமையை தக்க வைக்கலாம்.

ப்ளூபெர்ரி

இவ்வகை பழங்களில் கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் உள்ளது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும செல்கள் பாதிப்படையாமல் தடுத்து இளமையைத் தக்க வைக்கிறது.

தண்ணீர்

ஒரு நாளைக்கு எந்தளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்தளவுக்கு சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்து, இளமையை தக்க வைக்கும். பொதுமாக மனிதர்களின் டயட்டுக்கும் தண்ணீர் மிக முக்கியமானது.

சால்மன்

சால்மன் மீன்கள் இதய நோய்களைத் தடுப்பதோடு ஆண்களின் இளமையைத் தக்க வைக்க பெரிதும் உதவுகிறது. வாரத்திற்கு 2 முறை சால்மன் மீனை சாப்பிட்டால் நீண்ட நாட்களுக்கு இளமையை தக்க வைக்கலாம்.

தயிர்

தயிரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலிமையாக்குவதோடு எளிதில் செரிமானமாகக்கூடும் உணவாகவும் உள்ளது, இதில் புரோட்டீனும் அதிகளவில் நிறைந்துள்ளதால் இதனை அன்றாட உணவில் ஆண்கள் சேர்த்து வந்தால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.

காபி

காபி குடித்தால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் என ஆய்வுகள் கூறுகிறது. அதோடு காபி பர்கின்சன் நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கும். எனவே இளமையுடன் இருக்க நினைத்தால் தினமும் ஒரு கப் காபி குடிக்கலாம்.

ஆப்பிள்

ஆப்பிளில் கரையாத நார்ச்சத்துக்கள் இருப்பதால், இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதில் உள்ளது. எனவே தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நலன் பெயர்க்கும்.

பால்

பாலில் உள்ள புரோட்டீன், தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்வதோடு, தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும்.

வயது அதிகரிக்கும் போது ஒருவர் பாலை தினமும் அதிகம் குடித்து வந்தால், எலும்புகளின் வலிமை அதிகரித்து தோற்றத்தை சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் வெளிக்காட்ட உதவும்.

நட்ஸ்

நட்ஸில் நார்ச்சத்து, புரோட்டீன், ஒமேகா-3, அன்சாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை அதிகம் உள்ளது.

ஸ்நாக்ஸ் நேரத்தில் தினமும் இதை சாப்பிட்டு வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு நீண்ட நாட்கள் இளமையுடன் வாழலாம்.

திராட்சை

திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது. எனவே இளமையுடன் நீண்ட நாட்கள் வாழ தினமும் ஒரு கையளவு திராட்சையை அல்லது ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்