விட்டமின் சி அதிகமுள்ள உணவுகள் இவை தான்

Report Print Kabilan in ஆரோக்கியம்

நீரில் கரையக் கூடிய விட்டமின் சி, நமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும்.

ஆண்டி ஆக்ஸிடண்ட்களாக செயல்படும் இந்த விட்டமின் சி ஊட்டச்சத்தானது இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க பயன்படுகிறது.

நமது உடலில் விட்டமின் சி பற்றாக்குறை ஏற்பட்டால், நமது உடலின் எலும்பு மற்றும் தசைகளின் வலிமை பாதிப்படையும், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும்.

எனவே, இந்த பற்றாக்குறையை போக்க சில வகை உணவுப்பொருட்களை நாம் உட்கொண்டாலே போதும்.

கொய்யாப்பழத்தில் அதிக அளவில் விட்டமின் சி சத்து அடங்கியுள்ளது, ஒருநாளைக்கு நமக்கு தேவையான விட்டமின் சி ஊட்டச்சத்தை, தினமும் நாம் கொய்யப்பழம் சாப்பிடுவதன் மூலமாக பெறலாம்.

லிச்சி என்பது மிகவும் சுவையான பழம் ஆகும். இந்த பழத்தில் விட்டமின் சி-யுடன், பொட்டாசியம் மற்றும் கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன.

மஞ்சள் குடைமிளகாயில் 341 மில்லி கிராம் என்ற அளவில் விட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும், நோயெதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிப்பதால், உணவுக்கு இதனை நாம் பயன்படுத்த வேண்டும்.

பார்சிலி மூலிகையில் 133 சதவித அளவில் விட்டமின் சி சத்து உள்ளது. எனவே இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிவப்பு குடைமிளகாய், 317 மில்லி கிராம் விட்டமின் சியை கொண்டுள்ளதால் இதனையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு துண்டு கிவி பழத்தில், 273 மில்லி கிராம் அளவில் விட்டமின் சி உள்ளது. மேலும் விட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இதர ஊட்டத்துக்களும் இந்த பழத்தில் அடங்கியுள்ளதால், உடலுக்கு மிகவும் ஏற்ற பழம் இதுவாகும்.

பப்பாளி பழத்தில் 144 சதவித அளவில் விட்டமின் சி உள்ளது. மேலும் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்களும் இதில் அடங்கியுள்ளதால் நமது உணவுப் பட்டியலில் இதனையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் விட்டமின் சியுடன், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளதால், இதனை சாலட், ஸ்மூத்தி போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.

காலிஃப்ளவரில் வைட்டமின் சியுடன், புரோட்டீன், கால்சியம், விட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

நெல்லிக்காயில் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பொட்டாசியத்துடன் விட்டமின் சியும் உள்ளது. எனவே, இதனை தினமும் உண்ணலாம்.

மாம்பழத்தில் 76 சதவித அளவில் விட்டமின் சி உள்ளதால், ஒருநாள் விட்டு ஒருநாள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.

ஆரஞ்சு பழத்தில் 163 சதவிதத்தில் விட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே, இதனை ஜூஸாகவோ அல்லது சாலட் ஆகவோ செய்து சாப்பிடலாம்.

எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி பழங்கள் கலோரி குறைந்த கொழுப்பில்லாத பழங்கள் ஆகும். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான இவற்றை உட்கொண்டால், விட்டமின் சி சத்துக்களை பெறலாம்.

அன்னாசியில் 131 சதவிதத்தில் விட்டமின் சி உள்ளது. மேலும் விட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவையும் இதில் அடங்கியுள்ளது.

ப்ராக்கோலி உடலுக்கு தேவையான காய்கறியாகும். ஏனெனில், 1 Cup ப்ராக்கோலியில் 135 சதவித அளவில் விட்டமின் சி அடங்கியுள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்