கழுத்து வலியால் அவதிப்படுறீங்களா? அதிலிருந்து விடுபட இதோ சில டிப்ஸ்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்

இன்று ஏராளமானோர் தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, கால் வலி என்று பல வலிகளால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கழுத்து வலி என்பது தோள்பட்டை மற்றும் கழுத்து இணையும் இடம் அல்லது முதுகுப் பகுதியின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகளாகும்.

முக்கியமாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு தான் கழுத்து வலியில் இருந்து அனைத்து வகையான வலிகளும் வரும்.

கழுத்து வலிக்கான காரணங்கள்:

 • தவறான தூக்க நிலை மற்றும் உட்காரும் நிலை
 • அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் மற்றும் கஷ்டம்
 • நீண்ட நேரம் குனிந்தவாறு படிப்பது அல்லது எழுதுவது
 • தலை, கழுத்து அல்லது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தாலும் கழுத்து வலி வரும்.

கழுத்து வலிக்கான அறிகுறிகள்:

 • கழுத்து மற்றும் சுற்றியுள்ள பகுதியில் விறைப்பு
 • கழுத்துப் பகுதியில் ஊசி குத்துவது போன்ற கூர்மையான வலி
 • கழுத்து வலியுடன், தலைவலி
 • எதையும் தூக்க முடியாமல் கஷ்டப்படுவது.

கழுத்து வலியை இயற்கையாகவே சரிசெய்ய ஒருசில இயற்கை வழிகள் உள்ளன...

ஆப்பிள் சீடர் வினிகர்:

 • ஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் நீரை சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • பின் ஒரு பேப்பர் டவலை எடுத்து, அதில் நனைத்து, வலிமிக்க பகுதியில் வைத்து 1-2 மணிநேரம் ஊற வையுங்கள்.
 • இல்லாவிட்டால் பாத் டப்பில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி, வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதனுள் 1 மணிநேரம் கழுத்து முழ்கும் வரை அமர வேண்டும். இதனால் கழுத்து வலி மாயமாய் மறையும்.

ரோஸ்மேரி ஆயில்:

 • சில துளிகள் ரோஸ்மேரி ஆயிலை வலியுள்ள கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.
 • பின் 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
 • இந்த முறையை தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கழுத்து வலி காணாமல் போகும்.

கழுத்து பயிற்சிகள்:

 • நேராக உட்கார்ந்து, கழுத்து வட்ட சுழற்சியில் சுழற்ற வேண்டும்.
 • இதே பயிற்சியை எதிர் திசையில் மீண்டும் சுழற்ற வேண்டும்.
 • பின் கழுத்தை மேலும், கீழுமாக மெதுவாக அசைக்க வேண்டும்.
 • பின்பு தலையை பக்கவாட்டில் தோள்பட்டையைத் தொடுமாறு அசைக்க வேண்டும்.
 • இந்த பயிற்சிகளை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்பற்ற வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்