ஊற வைத்த அரிசியில் இவ்வளவு நன்மையா?

Report Print Harishan in ஆரோக்கியம்

கூந்தல் பராமரிப்பு, சரும சுருக்கம் நீக்குதல், புற்றுநோயை எதிர்த்து போராடுதல் உள்ளிட்ட எண்ணற்ற நன்மைகள் அரிசி கழுவிய தண்ணீரில் நிறைந்துள்ளது.

அரிசியை எடுத்து சாதாரண தண்ணீரில் இரண்டு முறை நன்கு கழுவிய பின்னர் அரை மணி நேரம் அளவிற்கு தண்ணீரில் ஊர வைத்திடுங்கள்.

பின்னர் அரிசியை விட்டு நீரை வடிகட்டி சேகரித்து, முகத்தில் கழுவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி புதுப்பொலிவு ஏற்படும்.

சிறிதளவு காட்டனை அரிசி நீரில் நனைத்து முகத்தை துடைத்து வந்தால் சருமத்துளைகள் அடைக்கப்படும்.

அரிசியில் உள்ள சத்துக்கள் முகத்தின் துளைகளுக்குள் சென்று, முகத்தின் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் ஆக்கிடும்.

கூந்தல் வறட்சியாக இருந்தால் அரிசி நீரில் அலசிய பின் நன்கு ஊற வைத்து சுத்தமான நீரில் கூந்தலை கழுவி குளித்திட வேண்டும்.

அவ்வாறு செய்து வரும்பட்சத்தில் கூந்தலின் மேன்மைத்தன்மை அதிகரித்து முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

ஆரோக்கிய பலன்கள்
  • மயக்கம் வரும் பட்சத்தில் ஒரு கிளாஸ் அரிசி தண்ணீர் பருகினால் இழந்த சக்தியை மீண்டும் பெறுவீர்கள்.
  • காய்ச்சல், வாந்தி ஏற்படும் தருணங்களில் அரிசி நீரை குடித்தால் உடனடி நிவாரணம் கிடைத்திடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
  • நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள அரிசி தண்ணீரை ரெகுலராக குடித்து வந்தால் கேன்சர் பாதிப்பில் இருந்து தப்பலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்