மேக்கப் இல்லாமல் இளமையாக தெறிவது எப்படி? இதோ சில டிப்ஸ்!

Report Print Harishan in ஆரோக்கியம்

அனைவரது ஆழ்மனதிலும் இருக்கும் ஆசை, தன் உண்மையான வயதைவிட இளமையாகத் தெரிய வேண்டும் என்பது தான்.

இங்கே உள்ள சில எளிய டிப்ஸ்களை பின்பற்றினாலே மேக்கப் இல்லாமல் உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரியலாம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதோ உங்களுக்கான அந்த டிப்ஸ்:

  • அலுவலகம் செல்லும் அவசரத்தில் தலைமுடியைச் சரியாக வாரிக்கொள்ளாமல் அள்ளிமுடிந்து போகாதீர்கள். கலைந்த கூந்தல்தான் உங்கள் வயதை அப்பட்டமாகக் காட்டும் முதல் எதிரி.
  • மாதம் ஒருமுறை கூந்தலின் நுனியை டிரிம் பண்ணிவிடுங்கள், அடியில் சமமாக இருக்கிற தலைமுடியும் உங்களுக்கு நீட் லுக் கொடுக்கும்.
  • தொப்பை இருப்பவர்கள், இன்றைய டிரெண்ட்படி இறுக்கமாக ஆடை அணிந்தால், தொப்பை அசிங்கமாகக் காட்டிவிடும். தொளதொள டிரெஸ்ஸிங்கும் செய்யாதீர்கள். உங்கள் உடல்வாகுக்கு ஏற்றபடி ஆடை அணியுங்கள். முப்பது வயதுகளில் உடம்பு வெயிட் போட்டுவிடும் என்பதால், லாங் டாப் - லெகின் என்று மேட்ச் செய்தால் உடல் மெலிவாகவும் இளமையாகவும் தெரிவீர்கள்.
  • சில பெண்களுக்கு வயது ஏற ஏற ஜீன் காரணமாக மேல் கை வெயிட் போட ஆரம்பிக்கும். அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அதை மறைக்கும் வகையில் முட்டி வரை ஸ்லீவ் டிரெஸ் செய்தால், உண்மையான வயது வெளியில் தெரியாது.
  • மாதத்துக்கு ஒருமுறை புருவங்களை திருத்திக்கொள்ளுங்கள். இது முகத்தை பளிச்சென்றுக் காண்பித்து, இளமையைக் கூட்டும்.
  • இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பார்லருக்குப் போய் ஃபேஷியல் செய்துகொள்வதன் மூலம் மரு, மாசு, பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் இல்லாமல் ஈவன் டோனாக இருக்கும். உதட்டுக்கு மேலே பூனை முடிகள் இருந்தால், பார்லரில் திரெட்டிங் செய்துகொள்ளுங்கள்.
  • பார்லருக்குச் செல்ல முடியாத பெண்கள் வீட்டிலேயே கடலை மாவு, பயித்தம் மாவு, முல்தானி மிட்டி, பால், தேன், தக்காளிச்சாறு எனப் பயன்படுத்தி சருமத்தில் டெட் செல்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான சருமம், லேசான எண்ணெய் பளபளப்புடன் மின்னுவது உங்களை இளமையாக காட்டும்.
  • வாரம் இருமுறையோ அல்லது ஒருமுறையாவது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை கூந்தலின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரைத் தடவி அரை மணி நேரம் கழித்து ஹேர்வாஷ் செய்யவும். எண்ணெய்ப் பசை குறைவான ஹேர்க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியலும் ஹேர்க்ரீமும் தலைமுடியை லேசான ஈரப்பதத்துடனே வைத்திருக்கும். இந்த ஈரப்பதம், கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் உங்களை இளமையாகக் காண்பிக்கும்.
  • உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற கலரில் ஆடை அணியுங்கள். அப்படி ஸ்கின் டோனுக்குப் பொருத்தமான கலர் டிரெஸ்ஸை அணிவதும் இளமையாகக் காட்டும் சீக்ரெட் வழிதான் என்கிறார் பியூட்டிஷியன்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்