பேரிச்சம்பழம் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வருமா?

Report Print Thuyavan in ஆரோக்கியம்

ஆரோக்கியமான உணவுப் பொருளாக கருதப்படும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

அப்படிப்பட்ட பேரிச்சம் பழம் சில பக்கவிளைவிவுகளை உண்டாக்க கூடும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா ?

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற கருத்துக்கு ஏற்றார் போல் இப்பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்குமாம்.

என்ன பக்கவிளைவுகள் ஏற்படும்

சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இது கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்த உணவாக கருதப்படுகிறது, ஆகையால் சட்டென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து டைப்-2 சர்க்கரை நோயை வரவழைத்துவிடும்.

நார்ச்சத்து அதிகளவில் உள்ளதும், கலோரிகளை அதிகமாக்கி உடல் எடையை அதிகரிக்க செய்து, உடல் பருமனையும் அதிகரிக்கிறது. எனவே எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர், தங்களது டயட்டில் பேரிச்சம் பழத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

அளவுக்கு அதிகமான நார்ச்சத்து, குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து வயிற்று வலியை உண்டாக்கும்.

பழம் நன்கு பளபளவென்று இருப்பதற்கு, அதன் மேல் சல்பைட் என்னும் கெமிக்கல் பூசப்படுகிறது. இந்த சல்பைட் பேரிச்சம் பழத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஒரு வேளை உங்களுக்கு சல்பைட் சகிப்புத்தன்மை இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகமாக சாப்பிடும் போது வயிறு உப்பசம் ஏற்படுகிறது.

ஃபுருக்டோஸ் பேரிச்சம்பழத்தில் அதிகம் உள்ளதால் வாய்வு தொல்லையை ஏற்படுத்தும்.

வயிற்றுப்போக்கை உண்டாக்கி அவதிபட செய்யும்.

பேரிச்சம் பழத்தில் ஹிஸ்டமைன் என்னும் அலர்ஜியை உண்டாக்கும் பொருள் உள்ளதால் சிலருக்கு பேரிச்சம்பழம் சாப்பிட்டால், சருமத்தில் அலர்ஜியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதுடன், பல் சொத்தயை உண்டாக்கும்.

குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு 300-500 கலோரிகள் எடுப்பதே நல்லது.

ஆகையால் அளவோடு சாப்பிட்டு மகிழ்வோடு இருக்க இந்த பதிவு உதவியாய் இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்