நீங்கள் முட்டை சாப்பிடுகிறீர்களா? இதை படியுங்கள்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

ஒரு முட்டையில் சராசரியாக 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 75 கலோரிகள், 185 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 70 மில்லிகிராம் சோடியம், 67 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன.

இவை தவிர, விட்டமின் ஏ, டி, பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லுடீன் (Lutein), சியாக்சன்தீன் (Zeaxanthin) ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கின்றன.

எனவே, முட்டையை அவித்தோ, மிளகு சேர்த்த ஆம்லேட்டாகவோ, வயதைக் கருத்தில் கொண்டு பச்சையாகவோ தேவைக்கேற்ப சாப்பிடுவோம்.

முட்டையை வேகவைப்பதால், அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவிடும், எனவே, அரைவேக்காடான முட்டைகள் சாப்பிடலாம் என நினைப்பது தவறு.

அரைவேக்காடான, முட்டை முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.

இது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு உகந்ததல்ல. வேகவைக்கும்போது, சத்துக்களின் அளவு குறைந்தாலும், நோய்ப் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

பச்சை முட்டையில் கிடைக்கும் சத்துக்களை முழுமையாகப் பெற சிறந்த வழி, வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிகமாகச் சாப்பிடுதல்.

மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், இதய நோயாளிகள், உடல் பருமனானவர்கள் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லேட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்