இதில் ஒரு டம்ளர் போதும்: ஒரு வாரத்தில் உடலை சுத்தம் செய்யலாம்

Report Print Kabilan in ஆரோக்கியம்

ஒவ்வொருவரும் தங்களது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை, அஜீரணம் உட்பட பல உபாதைகளை சந்திக்க நேரிடும்.

எடையும் அதிகரித்து செல்வதுடன் பல நோய்களுக்கு வழிவகுக்கும், எனவே உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவது அவசியமாகிறது.

இதற்கு ஊதா நிற முட்டைக்கோஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த ஜூஸை தயாரிக்க, 2 Cup ஊதா முட்டைக்கோஸ், செலரி கீரைத்தண்டு மூன்று, பாதியளவு எலுமிச்சை மற்றும் பாதியளவு பச்சை ஆப்பிள் ஆகியவை தேவை.

இந்த பொருட்களை நீரில் கழுவி, துண்டுகளாக்கி, பின்பு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், அதனை வடிகட்டினால் இந்த ஜூஸ் கிடைக்கும்.

ஊதா முட்டைக்கோஸில் உள்ள பொட்டாசியம், நமது உடலில் உள்ள நீர்ம அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

மேலும், இதிலுள்ள அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள், டாக்ஸின்களிடம் இருந்து செல்களைப் பாதுகாக்கும்.

செலரி கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், செரிமான பாதை மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியை தடுக்கும்.

மேலும் புற்றுநோயை தடுக்கும், இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு நல்லது மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.

ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் இந்த ஊதா நிற முட்டைக்கோஸைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்