எண்ணெய் தேய்த்து குளிப்பது எதற்காக? பலன்கள் தெரியுமா?

Report Print Harishan in ஆரோக்கியம்

இன்றைய காலகட்டத்திலோ எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது தீபாவளிக்கு மட்டுமே, ஆனால் அப்போதெல்லாம் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இது எதற்காக என்று யோசித்தது உண்டா?
 • சுற்றுச்சூழல் மாசு காரணமாக வெளியில் இருந்து குவியும் தூசு, தோலின் மீது படிந்து அழகைக் குலைத்து, சரும நோய்களுக்கு வழிவகுக்கிறது, எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சருமத்தின் உள்ளே படிந்த அழுக்குகள் வெளியேறும்.
 • உடல் உறுப்புகளான தோல், கல்லீரல், எலும்பை இணைக்கும் பகுதிகள், தசைகள், தோலில் உள்ள திசுக்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கவலை, எரிச்சல், சோர்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் எண்ணெய் குளியல் நம்மை பாதுகாத்திடும்.
 • வாரம் இருமுறை குளித்து வந்தால் வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
 • பேன், பொடுகுத் தொல்லை நீங்கி முடி நன்றாக வளர வேண்டும் என்றால் எண்ணெய் குளியல் அவசியம்.
 • எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும், மன அழுத்தம் குறையும், நீர்க்கடுப்பைப் போக்கும், உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும்.
எப்படி குளிக்க வேண்டும்
 • ஓரளவு வெதுவெதுப்பான நீரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் தேய்து குளிப்பது நல்லது.
 • ஆஸ்டியோபொரோசிஸ், வாதம், மூட்டு வலி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்து குளித்தால் நோய் குணமாக வாய்ப்புகள் அதிகம்.
 • 2, 3 கைப்பிடி அருகம்புல்லுடன் 2 ஸ்பூன் கார்போக அரிசி, 10 கிராம் வெட்டிவேர் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் புகை வரும் வரை காய்ச்சி எடுத்து தேய்து குளித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
 • குளித்து முடித்த பின் ஈரம் போகும் வரை தலையை நன்றாக துவட்டுவது அவசியம்.
என்னவெல்லாம் செய்ய கூடாது
 • எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால் வெளியில் அதிகம் அலையக் கூடாது, மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
 • அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜில் இருக்கும் ஜூஸ் வகைகளைச் சாப்பிட்டால் சட்டென சளி பிடிக்கலாம்.
 • உடலை எப்போதும், சீரான வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி இருந்தாலே எந்த நோயும் நெருங்காது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்