ஹீமோகுளோபினை அதிகரிக்க இதை மட்டும் செய்திடுங்கள்!

Report Print Kabilan in ஆரோக்கியம்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், உடல் அசதி, உற்சாகமின்மை, எப்போதும் களைப்பு, தூக்கம் வராத மனநிலை போன்றவை ஏற்படும்.

ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12-16கிராம் அளவிலும் இருக்கவேண்டும்.

8 கிராம் அளவிற்கு கீழே குறையும்பொழுது, ரத்தசோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை, ரத்தமானது ஏற்றுக்கொண்டு உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு அதனை வழங்கி, அதன்மூலம் நமது உடலுக்கு தேவையான திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கும்.

ஹீமோகுளோபினை அதிகரிக்க கருப்பு உலர்ந்த திராட்சை பயன்படுத்த வேண்டும்.

  • ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதனுள் மூன்று உலர்ந்த திராட்சை பழங்களை, மாலை 6 மணியளவில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
  • இரவு முழுவதும் ஊற விட்டு, மறுநாள் காலையில் ஒரு பழத்தை மட்டும் எடுத்து உண்டு, சிறிதளவு பழம் ஊறிய நீரை பருக வேண்டும்.
  • அதன் பின்னர், மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை உண்டு, சிறிது பழம் ஊறிய நீரை பருக வேண்டும்.
  • கடைசியாக, மாலை 6 மணிக்கு மீதமுள்ள பழத்தையும் உண்டு, நீரை முழுவதும் பருக வேண்டும்.

இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்