மாதவிலக்கின் போது மார்பகங்களில் அடர்த்தியில் மாற்றம்: என்ன செய்யலாம்?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்
249Shares
249Shares
ibctamil.com

மாதவிலக்கு நெருங்கும் சமயங்களில் சிலருக்கு மார்பகங்களில் வலி மற்றும் மார்பகங்களின் அடர்த்தி அதிகமாகும்.

மார்பகங்களில் வீக்கம், கனத்த உணர்வு, வலி போன்றவை இருக்கும். இதற்கு premenstrual syndrome என்று பெயர்.

புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள் காரணமாகவே பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகின்றது.

இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, மாதவிடாய் முடிந்த பின்னர் அதுவாகவே சரியாகிவிடும்.

மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் என்ன செய்யலாம்
  • பொதுவாக, மாதவிடாய் நேரங்களில் கொழுப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • கஃபைன் உள்ள காபி, டீ, கோலா, சாக்லேட் என எல்லாவற்றையும் தவிர்க்கவும்.
  • மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.
  • மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும்.
  • உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்