பேரீச்சம் பழத்தை எதனுடன் கலந்து சாப்பிடலாம்! நன்மைகள் இதோ

Report Print Kabilan in ஆரோக்கியம்
1010Shares
1010Shares
ibctamil.com

பேரீச்சை பழத்தினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன, அதனுடன் எதை கலந்து சாப்பிட்டால், பிற நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துணவுப் பழமாக பேரீச்சை உண்ணப்பட்டு வருகிறது. பெரும்பாலும், ரத்த விருத்திக்காக உண்ணப்படும் பேரீச்சை பழத்தில், வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் உள்ளதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

பேரீச்சை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் உண்ணப்படுகிறது. இது தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும்.

தினமும் ஒரு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம் பழத்துடன், ஒரு தம்ளர் பால் பருகி வர ரத்தம் விருத்தியடையும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு, இனிப்புச் சுவை நிறைந்த பேரீச்சை உகந்தது. காயத்தால் உண்டான ரத்த இழப்புக்கு, பேரீச்சை மூலம் சரி செய்யலாம்.

பேரீச்சம் பழத்தின் சாறு, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது.

மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் இரவில் 3 பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு பின்னர், சுடுதண்ணீர் அருந்தினால் நல்ல பயனைத் தரும்.

பேரீச்சையை பிற பழங்களுடன் சேர்த்து, சாலட் ஆக செய்து சாப்பிட்டால் வாதம், பித்தம், முட்டி வீக்கம் ஆகியவை குணமாகும்.

பேரீச்சை பழம் மட்டும் அல்லாது இதன் கொட்டையும் உடலுக்கு நன்மை பயக்கும். இதன் கொட்டையை, வறுத்துப் பொடி செய்து, பால் மற்றும் சர்க்கரை கலந்து பருகலாம். இது உடலுக்கு உரமளிக்கும் இதனை ஓரிரு வாரம் பருக வேண்டும்.

பல் முளைக்கும் குழந்தைகள், வயிற்றுக் கடுப்பால் அவதியுறும்போது பேரீச்சம் பழத்தை சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து, ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் 3 வேளையும் கொடுத்தால் பேதி நிற்கும்.

தினமும் 4 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றுக் கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அமிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளறுகள் வருவதில்லை, இது குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்