தொடர்ந்து இரண்டு வாரங்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

Report Print Raju Raju in ஆரோக்கியம்

வாழைப்பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

உடனடி ஆற்றல்

வாழைப்பழத்தில் பழசர்க்கரை, கரும்புச்சர்க்கரை, குளுகோஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் அது உடனடி வலிமை மற்றும் ஆற்றலை உடலுக்கு தருகிறது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட பொதுவாக அறிவுறுத்தப்படும், மலம் கழிப்பதை அது சீராக்குகிறது.

சீதபேதி

சீதபேதிக்கு வாழைப்பழம் சிறந்த நிவாரணியாகும், முக்கியமாக குழந்தைகளுக்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து கொடுத்தால் நல்ல பலனை தரும்.

மயக்கம் தெளிய

வாழைப்பழ மில்க் ஷேக்குடன் சிறிது தேன் கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் போதை மயக்கம் தெளியும்.

புகைப்படிப்பதை நிறுத்த உதவும்

வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் போன்ற சத்துக்கள் உள்ளதால் அதை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நிகோடினை வெளியேற்ற உதவும்.

அதிகரிக்கும் மூளையின் வளர்ச்சி

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வதோடு, எச்சரிக்கை உணர்வை அதிகரிக்க உதவும்.

சிறுநீரக கோளாறுகள்

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் அதிகமாக இருப்பதுடன், ப்ரோட்டின் சத்து குறைவாக உள்ளது. இதனால் சிறுநீரக பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.

உடல் எடை

வாழைப்பழங்களை ஆடையில்லாத பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

மாரடைப்பு

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள திரவங்களை சீராக ஆக்கி ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது, இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.

உடல் ரத்தம்

வாழைப்பழத்தில் உள்ள பி6 வைட்டமின் ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபினை சுத்தம் செய்து ரத்த ஓட்டத்தை ஒழுங்குப்படுத்துகிறது.

எலும்புகள்

உடல் எலும்புகள் வலுவிழப்பதால் ஏற்படும் Osteoporosis எலும்பு நோயை வாழைப்பழம் தடுக்கிறது, காரணம் இதில் அடங்கியுள்ள பொட்டாசியம் தான்.

கண்பார்வை

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் Macular degeneration என்ற கண் நோய் வராது, இது தான் பெரியவர்களுக்கு கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும் நோயாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்