முட்டை சாப்பிடுவதில் பலவிதம்: இப்படி சாப்பிட்டால் மட்டும் பக்கவிளைவுகள் ஏராளம்

Report Print Printha in ஆரோக்கியம்

முட்டையில் நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லுடீன்(Lutein), ஜீ ஜாந்தின்(Zeaxanthin) ஆகிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் ஆகியவை நிறைந்துள்ளது.

இத்தகைய சத்துள்ள முட்டையை சாப்பிடுவது ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதை சாப்பிடும் விதத்தில் சில வரைமுறைகள் உள்ளது.

வேகவைக்காத முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?
  • கண்டிப்பாக முட்டையை வேகவைக்காமல் சாப்பிடக் கூடாது. முட்டையை பச்சையாக சமைக்காமல் சாப்பிடுவதால் சில சமயத்தில் பாக்டீரியா தொற்றுக்களை ஏற்படுத்தி விடும்.
  • சமைக்காத வேகவைக்காத முட்டையை பாலில் கலந்து குடிக்கவும் கூடாது, ஏனெனில் அதனால் வயிற்று உப்பிசம் பிரச்சனை ஏற்படும்.
  • வேகவைக்காத முட்டையை தொடர்ந்து சாப்பிட்டால் செரிமானக் கோளாறு பிரச்சனைகளை உண்டாக்கி விடும்.
  • பச்சை அல்லது அரைவேக்காட்டில் வேகவைத்த முட்டையை குழண்டஹிகள் மற்றும் கர்ப்பிணிகள் கண்டிப்பாக சாப்பிடவே கூடாது. ஏனெனில் அதில் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.
  • முட்டை சாப்பிடுவதை பொறுத்தவரை சமைக்காத முட்டையை சாப்பிடுவதால் வாய்வுத் தொல்லை, வாந்தி, நீர்வறட்சி, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
குறிப்பு

அவித்த அல்லது பொரித்த முட்டை சாப்பிடும் போது பால் குடிக்கலாம், ஆனால் சமைக்காத முட்டையை சாப்பிடும் போது கண்டிப்பாக பால் குடிக்கக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்