வெந்நீர் பருகுவதால் பக்கவிளைவுகளும் உண்டு: எச்சரிக்கை தகவல்

Report Print Kabilan in ஆரோக்கியம்
542Shares
542Shares
ibctamil.com

வெந்நீரில் பருகுவதில் உண்டாகும் நன்மைகள் போல், பக்க விளைவுகளும் உள்ளன. அவை என்னவென்று இங்கு பார்ப்போம்.

மனித உடல் 70 சதவிதம் தண்ணீரால் ஆனது, இதனால் உடல் நீர்ச்சத்தோடு இருக்க முடிகிறது, எனவே சூடான நீர், நச்சுக்களை வெளியேற்றும் என்று நாம் நினைத்து அதிகமாக பருகுவது தவறாகும்.

வெந்நீரை அதிக அளவு பருகும்போது, அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், வெந்நீரானது சிறுநீரகத்தின் சுத்திகரிப்பு வேலையை அதிகப்படுத்தும், எனவே சிறுநீரகம் சேதம் அடையும் வாய்ப்புள்ளது.

ரத்தத்தில் உள்ள எலெக்ட்ரோலைட்கள், வெந்நீரினால் அதிகளவில் நீர்த்துப் போகின்றன. இதனால் செல்களில் வீக்கம் ஏற்பட்டு தலைவலி, மூளை அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன.

நமது உள்ளுறுப்புகளில் இருக்கும் வெப்பநிலையை விட, வெந்நீரில் உள்ள வெப்பநிலை மிக அதிகம் என்பதால், அதனை நாம் பருகும்போது உணவு குழாயும், செரிமான பாதையும் பாதிப்படையும்.

அதிக அளவில் வெந்நீரை பருகும்போது மூளையில் உள்ள செல்கள் வீக்கமடையும், சூடான நீரை பருகும்போது உதடுகள் பாதிப்படையலாம்.

எனவே, ஒரேயடியாக வெந்நீரை நிறைய பருகுவதை விட, சிறிதளவு நீரைப் பருகி அதன் வெப்பநிலையை உணர்ந்து, அதன் பின்னர் அதிகமாக பருகலாம்.

இரவு நேரத்தில் உறங்கச் செல்லும் முன், அதிகமாக தண்ணீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது தூக்கத்தின் தன்மையை பாதிக்கும்.

குளிர்ந்த நீரை விட அதிகமாக வெந்நீரில் தொற்றுகள் கரையும். எனவே, குளிர்ந்த நீரை ஒரு பாத்திரத்தில் காய்ச்சி அதனை பருகலாம். தாகம் எடுக்கும்போது தண்ணீர் பருகுவது ஒன்று தான் இதற்கு தீர்வாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்