சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
427Shares

டயாபெட்டீஸ் பொதுவாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் வருகிறது. நமது உடலில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் சர்க்கரையை குளுக்கோஸாக உடலில் மாற்றம் செய்கிறது.

சர்க்கரை நோய் அதிகரிக்க காரணம் அதிகமான செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் மார்க்கெட்டில் அதிகரிப்பதே ஆகும்.

எனவே செயற்கை இனிப்பு சுவையூட்டிகளுக்கு பதிலாக இயற்கை பொருட்களான வெல்லம், கருப்பட்டி மற்றும் தேன் போன்றவற்றை பயன்படுத்தலாமா என்பது கேள்வியாக உள்ளது.

ஜாக்கரி எந்த விதமான சுத்திகரிப்பும் செய்யப்படாததால் அதில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்ற பொருட்கள் உள்ளன.

ஆனால் சர்க்கரை போலவே இதுவும் நமது உடலில் அதே விளைவை தான் ஏற்படுத்தும். எனவே டயாபெட்டீஸ் நேயாளிகளுக்கு ஜாக்கரி அதிகமாக பரிந்துரைக்கப்படுவதில்லை. ஜாக்கரி ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

வெல்லத்தில் இருக்கும் ஊட்டச்சத்து அளவுகள் சர்க்கரையை விட வித்தியாசமானது. ஒரு 10 கிராம் வெல்லத்தில் இருக்கும் கலோரியானது 38.3, இது 97% சர்க்கரையின் அளவிற்கு அடங்கும்.

ஜாக்கரியின் நன்மைகள்:

மலச்சிக்கலை தடுத்து நிறுத்திகிறது. சீரண என்ஜைம்களை செயல்படுத்துகிறது. இதனால் சீரண சக்தி மேம்படுகிறது. அனிமிக்ஸ் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது.

ஏனெனில் இதில் நிறைய இரும்புச் சத்து உள்ளது. கல்லீரலின் செயலை துரிதப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இருமல் மற்றும் சளியை போக்குகிறது எல்லாரும் வெல்லத்தை உணவு சாப்பிட்ட பிறகு சிறிய துண்டு சாப்பிடுவது நல்லது.

இதுவே டயாபெட்டீஸ் நோயாளிகள் வெல்லம் சாப்பிட்ட பிறகு மறக்காம உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்