வெறும் வயிற்றில் செம்பருத்தி பூவை மென்று சாப்பிடுங்கள்: இந்த மாற்றம் தெரியும்

Report Print Printha in ஆரோக்கியம்

செம்பருத்தியின் இலைகள் மட்டுமில்லாமல் அதனுடைய பூக்களும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

அதுவும் இந்த செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

செம்பருத்தி பூவின் நன்மைகள்
  • காலையில் எழுந்ததும் 5-6 செம்பருத்தி பூக்களை மென்று சாப்பிட்டு சிறிது நீர் அருந்தி வர, ரத்தம் சுத்தமாகி, வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிலக்கு கோளாறு போன்றவை குணமாகும்.
  • செம்பருத்தி இதழ்களை மெல்லிய துணியில் கட்டி 10 நாட்கள் வெயிலில் வைத்த எடுத்த பின் அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலையில் தேய்த்து வர முடி நன்கு வளரும்.
  • தேங்காய் எண்ணெயில் செம்பருத்தின் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து அதை தொடர்ந்து தலையில் தடவி வர, கூந்தல் கருமையாகும்.
  • செம்பருத்தி பூவை மற்றும் இலைகளை சேர்த்து நீரில் போட்டு கொதிக்க வைத்து டீயாக அருந்தி வர, ரத்த அழுத்தம் சீராகி, உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.
  • ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை கரைத்து, சருமத்தை பளபளப்பாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • செம்பருத்தி இலையின் சாறை எடுத்து அதை தலையில் வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்தால் நல்ல மாற்றம் தெரியும்.
  • செம்பருத்தியின் இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ போல பயன்படுத்தலாம், முடியின் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்