காலிப்ளவரை அடிக்கடி சாப்பிடுங்கள்: இவர்கள் மட்டும் சாப்பிடக் கூடாது

Report Print Printha in ஆரோக்கியம்

காலிப்ளவரில் விட்டமின்கள், மினரல்ஸ், ரிபோஃப்ளேவின், நியாசின், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை நிறைந்துள்ளது.

இத்தகைய சத்துள்ள காலிப்ளவரை பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும்.

காலிப்ளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 • காலிப்ளவரில் உள்ள இன்டோல்ஸ் மற்றும் க்ளூகோசினேட்ஸ், நம் உடலில் உள்ள செல்களை புத்துணர்ச்சியாக்கி, சோர்வை போக்க உதவுகிறது.

 • இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கிறது.

 • காலிப்ளவரில் உள்ள அதிகப்படியான டயட்டரி ஃபைபர், உணவு செரிமானத்தை துரிதப்படுத்தி, பல்வேறு வயிற்று உபாதைகள் வராமல் தடுக்கிறது.

 • காலிப்ளவரில் உள்ள க்ளூகோசினேட்ஸ், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முற்றிலுமாக தடைசெய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 • நம் உடலில் கொலாஜென் உற்பத்தி, எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரித்து, எலும்புகள் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

 • காலிப்ளவரில் விட்டமின் C மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடண்டுகள் நம்முடைய உள்ளுறுப்புகளுக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுத்து வயதான தோற்றத்தை தவிர்க்க உதவுகிறது.

 • காலிப்ளவரில் இருக்கும் சல்ஃபோரபேன், நரம்புகளின் செயல்பாடுகளை சீராக்கி, நரம்புகள் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

 • நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் தேங்கும் கொழுப்பை கரைப்பதற்கும், கொழுப்பு சேராமல் தடுக்கவும் உதவுகிறது.

 • கர்ப்பக் காலத்தில் பெண்கள் காலிப்ளவரை உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

 • காலிப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து எளிதில் தப்பிக்கலாம்.

 • காலிப்ளவரில் இருக்கும் அலிசின், நுரையீரலை சுத்தமாக்கி, பக்கவாதம் பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.

குறிப்பு

காலிப்ளவரை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால், பாக்டீரியா தொற்று, வயிற்றில் கேஸ் பிரச்சனைகள், கிட்னி கல் ஆகிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆனால் ரத்தம் உறைதல் பிரச்சனைக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் காலிப்ளவரை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்