இதை செய்தாலே போதும்: உடல் எடை படிப்படியாக குறையும்

Report Print Printha in ஆரோக்கியம்

உடலில் சேரும் கொழுப்புகளின் அளவை குறைக்க நிறைய வழிகள் இருந்தாலும் சரியான டயட், கடுமையான ஜிம் மற்றும் உடற்பயிற்சிகளை தினசரி முறையாக பின்பற்றி வந்தாலே ஈஸியாக உடல் எடையைக் குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்கும் வழிகள்?

  • தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும். அதற்காக உணவை தவிர்க்க கூடாது.

  • சாதாரணமான நேரத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்படும் போது சாப்பிடலாம்.

  • வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அடிக்கடி பச்சையாக சாப்பிடுவது நல்லது.

  • உடலை ஒல்லியாக்கும் உடற்பயிற்சியை தினமும் ஜிம்மிற்கு சென்று 30-45 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தாலே போதும்.

  • சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது, உடல் எடையை குறைக்க உதவும். எனவே இதை தினமும் 3-4 முறை சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.

  • உப்பு மற்றும் இனிப்பு பண்டங்களை தவிர்த்து அளவுக்கு அதிகமாக தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் கொழுப்பு குறையும்.

  • உடல் எடையை குறைக்க 3 வேளை சாப்பிடும் முறையை 3 மணி நேர இடைவெளி விட்டு 6 முறை சிறிது சிறிதாக சாப்பிட வேண்டும்.

  • உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். அதனால் கொள்ளை ஊறவைத்து சாப்பிடலாம் அல்லது ரசம், சுண்டல் போன்றவை செய்தும் சாப்பிடலாம்.

  • டயட்டில் இருப்பவர்கள் வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது சர்க்காரை, உப்பு, சாதம், பால், தயிர் போன்றவை ஆகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்