உறங்கும் முன் 1 டம்ளர் பால் குடித்து பாருங்கள்: இந்த 5 பலன்களை பெறலாம்

Report Print Printha in ஆரோக்கியம்

பாலில் அதிகமான புரதம் மற்றும் முட்டையில் உள்ள அல்புமின் சத்து, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், விட்டமின் B12 போன்ற பலவித சத்துக்கள் அடங்கியுள்ளது.

இரவு முழுவதும் ஓய்வு எடுக்கும் நிலையில் நம் உடலுறுப்புகள் இருப்பதால், அவை காலை வரை இயங்குவதற்கு தேவையான சத்தும், ஊட்டமும் தேவைப்படும்.

அதற்கு இரவு உறங்கும் முன் 1 டம்ளர் தினமும் பால் குடித்து வந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

பால் குடிப்பதன் மருத்துவ நன்மைகள்

  • பால் குடிப்பது குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் உடல், மூளை, எலும்பு ஆகியவற்றின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் மிகச்சிறந்த உணவாக பயன்படுகிறது.

  • பெண்கள் இரவு நேரத்தில் ஒரு டம்ளர் பால் குடித்து உறங்கினால், வயிற்று வலி, மாதவிலக்கு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

  • ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள பாலில் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு நெய் கலந்து குடித்து வந்தால் உடலின் வலிமை அதிகரிக்கும்.

  • பால் அருந்துவதால் வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல் போன்ற வயிறு தொடர்பான் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

  • பாலில் இயற்கையாக உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரை சத்து நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தாக்குதலை குறைக்கிறது.

குறிப்பு

பாலில் உள்ள லாக்டோஸ் எனும் இயற்கை சர்க்கரை சத்து சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அத்தகையவர்கள் பால், தயிரை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்