தங்க நிறத்தில் மின்னும் கேரட் விதை எண்ணெய்: அசர வைக்கும் அற்புதம் இதோ

Report Print Printha in ஆரோக்கியம்

கேரட் விதைகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய் தங்க நிறத்தில் இருக்கும். இந்த எண்ணெய் எண்ணெற்ற சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

கேரட் விதை எண்ணெய்யின் நன்மைகள்?
 • வயிறு, வாய் மற்றும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் சுரப்பி போன்ற உறுப்புகளில் உண்டாகும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 • இருமல், சளி, நுரையீரல் அலர்ஜி ஆகிய நுரையீரல் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் குணங்களை கேரட் விதை எண்ணெய் கொண்டுள்ளது.
 • சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, சோரியாசிஸ் போன்ற அலர்ஜி மற்றும் வயிற்று புண்கள் ஆகிய பிரச்சனைகளை குணமாக்கும் மருந்தாக பயன்படுகிறது.
 • சிறுநீரகம் மூலமாக, யூரிக் அமிலத்தை வெளியேற்றி மூட்டு வாதத்தினை வர விடாமால் கேரட் விதையின் எண்ணெய் பாதுகாக்கிறது.
 • வாய்வு, உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கல்லீரலில் உண்டாகும் அதிக அமிலத்தன்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
 • கேரட் விதை எண்ணெயில் ஆன்டி-செப்டிக் குணங்கள் உள்ளது. அவை சருமத்தில் ஏற்படும் காயங்கள் மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்களை விரைவில் குணமாக்க உதவுகிறது.
 • உடலின் தசை பாதிப்புகள் மற்றும் தோல் சுருக்கங்களை சரிசெய்து, கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.
 • தொடர்ந்து கேரட் விதை எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால், சீரற்ற மாதவிலக்கு வராது.
 • கேரட் விதை எண்ணெய் நரம்புகள் மற்றும் என்சைம்களின் சுரப்புகளை தூண்டி, மூளையின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
 • கேரட் விதை எண்ணெயில் சைட்டோ பைலேக்டிக் குணம் உள்ளது, நம் உடலின் புதிய திசுக்கள் வளரச் செய்து உடலின் வலிமை மற்றும் புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது.
 • வேலை மற்றும் மனக் கவலைகளால் உண்டாகும் அழுத்தத்தை போக்கி மன அழுத்தம் வரமல் தடுக்கிறது.
குறிப்பு

கேரட் விதை எண்ணெயை கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அது சில சமயம் அலர்ஜியை உண்டாக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்