வெறும் வயிற்றில் க்ரீன் டீ: அற்புதத்தை பாருங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
382Shares

க்ரீன் டீயில் உள்ள உட்பொருட்கள் மற்றும் மருத்துவ குணங்கள் என்றும் இளமையோடு வாழ்வதற்கு உதவுகிறது.

ஆனால் இதய நோய், அல்சர், உளவியல் கோளாறுகள் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், ஹீமோதெரபி, ஆன்டிபயாடிக்ஸ் ஆகியோர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு க்ரீன் டீ குடிக்கலாம்.

வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதன் நன்மைகள்

  • க்ரீன் டீயில் உள்ள பாலீஃபீனால் எனும் சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

  • க்ரீன் டீயில் உள்ள காப்ஃபைன் ஊட்டச்சத்து உடலின் கொழுப்பைக் குறைப்பதோடு, கலோரிகளையும் குறைக்கிறது.

  • நம் உடலில் வளரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழிப்பதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

  • ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் க்ரீன் டீயில் உள்ளது. இது ரத்தத்தை சுத்தம் செய்து, இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • வெறும் வயிற்றில் க்ரீன் டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் காப்ஃபைன் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது.

  • க்ரீன் டீயில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய்துர்நாற்றம் மற்றும் சொத்தைப்பல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

  • க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

  • க்ரீன் டீயானது நம் உடலில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறுகளின் உற்பத்தியைத் தடுத்து, உடலினுள் ஏற்படும் காயங்கள் மற்றும் ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

  • வாரத்திற்கு குறைந்தது 6 கப் க்ரீன் டீ குடிப்பவர்களுக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் குறைவு என்று ஆய்வுகள் கூறுகிறது.

குறிப்பு

ஒரு கப் க்ரீன் டீயில் 30-50 மிகி காப்ஃபைன் உள்ளது. எனவே இதை ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்