51 நாட்களில் 18 கிலோ எடை குறைத்த சூப்பர் ஸ்டார்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்
259Shares

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தனது உடல் எடையை குறைத்து இளம் வயது வாலிபர் போன்று தோற்றம் அளிக்கும் புகைப்படம் தான் தற்போது மலையாள உலகின் ஹாட் டாப்பிக்காக வலம் வருகின்றது.

தனது அசாத்திய நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மோகன்லால், சற்று எடையுடன், அழகிய தாடி வைத்துதான் எப்போதும் இருப்பார். இப்படியே மோகன்லாலை பார்த்து ரசித்த அவரது ரசிகர்களுக்கு, சமீபத்தில் வெளியான அவரது புகைப்படம் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரணம், தனது உடல் எடையை குறைத்து, க்ளீன் ஷேவ் செய்து பார்ப்பற்கு தனது மகன் ப்ரணவின் சகோதரன் போன்று இருந்துள்ளார்.

ஒடியன் என்ற திரைப்படத்திற்காகவே அவர் எடையை குறைத்துள்ளார், 51 நாட்களில் 18 கிலோ எடை குறைத்துள்ளார்.

இவர் உடல் எடையை குறைப்பதற்காகவும், இவரது தோல்கள் இளமையாக இருப்பதற்கும் பிரான்சில் இருந்து தோல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

தினமும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் யோகா செய்துள்ளார், மேலும் உடற்தகுதிக்காக பிரான்சில் இருந்து சிறந்த தோல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

புரோட்டீன் உணவுகள், கொழுப்பு அல்லாத உணவுகள் மற்றும் காய்கறிகள், பழங்களை சாப்பிட்டு உடல் எடையை குறைத்துள்ளார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்