உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்று பல்வேறு வகையான டயட் உணவுகளை பின்பற்றி இருப்போம்.
ஆனால் உணவே இல்லாமல் தண்ணீர் டயட் மூலம் நமது உடல் எடையில் வெறும் 10 நாளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
நாள் 1
வாட்டர் டயட்டின் முதல் நாள் வெறும் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். அதிலும் ஒருநாள் முழுவதும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நாள் 2
இரண்டாம் நாள் க்ரீன் டீ மட்டும் குடிக்க வேண்டும். இதனால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.
நாள் 3
மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரை குடிக்க வேண்டும். இதன் மூலம் நம் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
நாள் 4
நான்காம் நாள் நீரில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தை கலந்து 5 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். இதனால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
நாள் 5
ஐந்தாம் நாள் அன்று 4 முறைகள் ஒவ்வொரு கப் உங்களுக்கு பிடித்த சூப் குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக கூட இருக்கலாம்.
நாள் 6
ஆறாம் நாள் வெறும் பழங்களினால் தயார் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை வீட்டிலே செய்து குடித்து வேண்டும்.
நாள் 7
ஏழாம் நாள் நீரில் 1 சிட்டிகை சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் எடை குறைவதுடன், உடலின் ரத்த அழுத்தமானது சீராகும்.
நாள் 8
எட்டாவது நாளில் வெறும் சுடுநீரை மட்டும் குடிக்க வேண்டும். இதனால் நம் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.
நாள் 9
ஒன்பதாவது நாள் மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட டீயை குடிக்க வேண்டும். இதனால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.
நாள் 10
பத்தாவது நாளில் எலுமிச்சை ஜூஸில் தேன் மற்றும் பட்டைத் தூள் சேர்த்து குடித்து வர வேண்டும்.
குறிப்பு
மேற்கூறியவாறு வாட்டர் டயட்டை பின்பற்ற முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் அவ்வப்போது பழங்களை கூட சாப்பிட்டு வரலாம்.