கரும்புச் சாற்றின் நன்மைகள்

Report Print Santhan in ஆரோக்கியம்

நமக்கு சர்வ சாதரணமாக கிடைக்கும் கரும்புச் சாறிலிருந்து, பல்வேறு விதமான நோய்கள் மிக எளிதாக குணமாகுகின்றன. அவைகளை பற்றி இங்கு காணலாம்

  • ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும தேங்காய்த் தண்ணீரில் கரும்புச் சாறு குடித்து வர, சிறுநீரக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் பிரச்னைகள் குணமாகுகிறது.
  • வெயில் காலங்களில் கரும்புச்சாறு குடிப்பதால், உடலின் நீர்ச்சத்து தாக்குபிடித்து, புத்துணர்ச்சி கிடைக்கிறது.
  • வாய் தூர் நாற்றத்தை போக்கும் வலிமை கரும்புச்சாறுக்கு உண்டு. மேலும், பற்கள் வலிமை பெறுவதற்கும் கரும்புச் சாறு பெரிதும் உதவுகிறது.
  • கரும்புச் சாறில் உள்ள பொட்டாசியம், நம்முடைய செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
  • உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள், கரும்புச்சாறை குடிக்கலாம். இதில் உள்ள வைட்டமின் சி, கெட்ட கொழுப்பு குறைவதற்கும் உதவுகிறது.
  • நாட்டுச் சர்க்கரையுடன் கரும்பு வேர் சேர்த்து கொதித்து வைத்து குடித்து வர, சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகுகின்றன.
  • கரும்புச்சாறு குடிப்பதால், வெயில் காலங்களில் ஏற்படும் உடல் எரிச்சல் சரியாகுகிறது.
  • இது மூளையின் இயக்கத்தை அதிகரிப்பதால், நமது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது.
  • கரும்பை நசுக்கி, நமது உடலின் புண், காயம் இருக்குமு் இடங்களில் கட்டி வைத்தால், விரைவில் குணமாகும்.
  • நாட்டு சர்க்கரை மற்றும தேன் மெழுகு, இவற்றை ஒன்றாக சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவி வந்தால், நமது முகத்தின் அழகை கெடுக்கும் பருக்களை நீக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்