இனிமேல் காலையில் எழுந்தவுடன் பல் துலக்காதீர்கள்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

நாம் அனைவருமே காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்குவோம், ஆனால் அப்படி செய்யக்கூடாதாம்.

இதற்கு காரணம் என்னவென்றால் இரவில் தான் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

தினமும் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில், பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சொக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச்(Lactic Acid) சுரக்கின்றன.

இந்த அமிலம் எனாமலை(Enamel) அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

மேலும், பற்கள் மற்றும் ஈறுகளில் வலியும் ஏற்படுகிறது. எனவே, பற்கள் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு நீங்கள் காலையில் பற்களை சுத்தம் செய்யாமல் இருந்தாலே போதும்.

காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை பல்வேறு உணவுகளை உட்கொள்கிறோம். அந்த உணவுகளானது பற்களின் இடுக்களில் போய் ஒட்டிக்கொள்கிறது.

நாம் தூங்கிய ஒரு மணிநேரத்தில் கிருமிகள் நமது பற்களில் புகுந்து பற்களை சொத்தையாக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன.

அதாவது, நம்முடைய வாயை ஒருமணி நேரத்திற்கு மேல் மூடியிருந்தால் போதும், கிருமிகள் உட்புகுந்து ஒருவித துர்நாற்றம் அடிக்கும்.

அப்படியிருக்கையில், நாம் இரவு தூங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளேயே கிருமிகள், பல்வேறு சேதாரங்களை பற்களில் ஆற்றிவிடும்போது, காலையில் எழுந்து எதற்காக பற்களை சுத்தம் செய்கிறீர்கள்.

எனவே, காலையில் பற்களை சுத்தம் செய்வதை தவிர்த்து, இரவு நேரத்தில் சுத்தம் செய்யுங்கள். இரவு நேரத்தில் நீங்கள் பற்களை சுத்தம் செய்துவிட்டு தூங்க சென்றால் எவ்வித கிருமிகளும் பற்களை அண்டாது.

காலையில், சுடுநீர் அல்லது சுடுநீருடன் கொஞ்சம் உப்பு கலந்து சுத்தம் செய்தால் போதுமானது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்