கிழங்கு வகையைச் சேர்ந்த கருணைக் கிழங்கில் அதிக வைட்டமின் சத்தும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தும்ள உள்ளது.
தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இது ஆப்ரிக்காவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
இந்த கிழங்கைச் சத்து நிறைந்த உணவாக பலர் கருதினாலும், சில பக்கவிளைவுகளும் உள்ளன.
100 கிராம் கருணைக் கிழங்கில் 27 கிராம் மாவுச்சத்து உள்ளதால் இது அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு ஏற்றதல்ல.எனவே உடற்பருமனைக் குறைக்க நினைப்போர் இதைத் தவிர்த்தல் நல்லது.
100 கிராம் கருணைக் கிழங்கில் 1.5 கிராம் புரதச்சத்து மட்டுமே உள்ளது. நம் திசுக்களின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் புரதம் மிக அவசியமான ஒன்றாகும்.
கருணைக் கிழங்கில் நமக்கு அவசியமான புரதம் கிடைப்பது கடினம். இக்கிழங்கை அதிகம் உண்ணும் ஆப்ரிக்கப் பகுதி மக்கள் Kwashiorkorஎன்னும் புரதச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்படுகிறார்கள்.
இரும்புச்சத்து உடலில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் சென்றடைய உதவுகிறது. வைட்டமின் டி எலும்பு வளர்ச்சிக்கும், கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது. இவை இரண்டுமே கருணைக் கிழங்கில் குறைவு.
வைட்டமின் பி12, டிஎன்ஏ மற்றும் சிகப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு அவசியமாகும். கருணைக் கிழங்கில் இதுவும் குறைவாகும்.