கல்லீரல் நோயா? கவலை வேண்டாம்.. இயற்கை தீர்வுகள் இருக்கே!

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
625Shares

உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பது இரத்தம் ஆகும்.

இப்படி நாம் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் இரத்தத்தை சுத்திகரிப்பது எது தெரியுமா?

உடலுக்குத் தேவையான கொழுப்பு, இரும்புச்சத்து போன்றவற்றை வளர்சிதை மாற்றம் செய்து, உணவின் ஜீரணத்திற்கு உதவுவது எது தெரியுமா?

புரதம் மற்றும் இரத்த உறைவு காரணிகளின் உற்பத்தியில் பங்கு கொள்வது எது தெரியுமா?

”கல்லீரல்”’. இந்த உறுப்பே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளைச் செய்கின்றது.

இது சரியாக வேலை செய்யாமல் போனால் அல்லது பழுதடைந்தால் எடை குறைவு, வாந்தி, மஞ்சள் காமாலை, வயிற்றின் வலது மேல்பகுதியில் வலி, சிர்ரோஸிஸ் போன்றவை ஏற்படும்.

கல்லீரல் பழுதை வீட்டிலுள்ள பொருட்களை வைத்து குணப்படுத்தலாம்.

  • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், 1 டம்ளர் நீர், 1 டீஸ்பூன் தேன் இவை மூன்றையும் கலந்து மூன்று வேலை அருந்தினால் கொழுப்பு கரைந்து, கல்லீரல் சுத்தமாகும்.
  • அறிவியல் ஆய்வுகளின் படி நெல்லிக்காய் உட்கொள்வது கல்லீரல் செயல்பாட்டைப் பாதுகாக்கும். 4-5 நெல்லிக்காய்கள் தினமும் சாப்பிடுவது நல்லது.
  • ஆயுர்வேத முறைப்படி அதிமதுரத்தை நீரில் கொதிக்க வைத்து தினமும் 1-2 முறை குடித்து வர, கல்லீரல் கொழுப்பு அகலும்.

  • க்ளூட்டதியோன் நிறைந்த அவகேடோ பழ மில்க் ஷேக்கைத் தொடர்ந்து அருந்தினால் கல்லீரலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கும்.
  • வால்நட்ஸ், ஆளி விதை போன்றவை கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை.
  • மதுவைத் தவிர்த்தால் கல்லீரல் நோய்களில் இருந்து தப்பலாம். ப்ளூரைடு இல்லாத நீர் அருந்துங்கள்.10-12 டம்ளர் நீர் குடித்தால் நச்சுக்கள் வெளியேரும்.
  • தினமும் உடற்பயிற்சி செய்வது நச்சுக்களை அகற்றவும், கல்லீரலில் அழுக்குத் தேக்கத்தைத் தடுக்கவும் உதவும்.
  • உணவில் க்ரீன் டீ, பித்த நீர் உற்பத்தியைத் தூண்டும் பச்சை இலைக் காய்கறிகள், பெக்டின் நிறைந்த ஆப்பிள்கள், ஹிபடைடிஸ் பி, சி வைரஸ்களின் பெருக்கத்தைத் தடுக்கும் மஞ்சள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  • 2 டீஸ்பூன் பப்பாளி ஜூஸ், 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து குடித்தால் கல்லீரல் பிரச்சினை முழுமையாக குணமாகும்.
  • ½ டம்ளர் பசலைக்கீரை ஜூஸ் மற்றும் ½ டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்து 3 மணிநேரத்திற்கு ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டால், கல்லீரல் அழற்சி நோயிலிருந்து விடுபடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்