இந்த இனிப்பு உடல் எடையை குறைக்கும்: உங்களால் நம்பமுடிகிறதா?

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

உலகம் முழுவதிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இனிப்பை சாப்பிட ஆசைப்பட்டாலும் கைகூடுவதில்லை.

அவர்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இனிப்பை ருசிக்க மாற்றுப் பொருள் உள்ளதே!!!

நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியின் உள்ளே இருக்கும் வெல்லம் தான் அந்த மாயப்பொருள்.

வெல்லத்தின் நன்மைகள் எவ்வளவு தெரியுமா? இதோ உங்களுக்காக

  • வெல்லத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது, பொட்டாசியம் வளர்சிதை மாற்றத்திற்கும், உடலில் நீர் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்வதற்கும் உதவுவதால் உடற்பருமனைக் குறைக்க உதவுகின்றது.
  • ஆன்ட்டி ஆக்சிடெண்ட்களும், துத்தநாகம், செலினியம் போன்றவை வெல்லதில் உள்ளதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், நோய்த் தாக்குதலில் இருந்து உடலைக் காப்பாற்றவும் செய்கின்றது.
  • ஜீரண நொதிகளை வெல்லம் நன்கு சுரக்கச் செய்வதால், மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து காப்பாற்றி வயிற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
  • இரத்தச்சோகையால் அவதிப்படுவோருக்கு இரும்புச்சத்து நிறைந்த வெல்லம் பயனளிக்கும், சரியான அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
  • உடலில் இருந்து தேவையற்ற கழிவுகளை அகற்றவும், மூச்சுப்பாதை, நுரையீரல், குடல், வயிறு போன்றவற்றை சுத்தம் செய்யவும் வெல்லம் உதவுகிறது.
  • வெல்லத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளதால் உடலின் அமிலத்தன்மையைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவுகிறது.
  • உடலுக்கு மிகுந்த ஆற்றலைக் கொடுக்கக் கூடியது வெல்லம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்