இந்த உடல் பருமனில் நீங்கள் எந்த வகை? ஈஸியாக குறைக்கும் வழி இதோ

Report Print Printha in ஆரோக்கியம்

ஒருவரின் உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளதை போன்றே அதை குறைப்பதற்கும் பல வழிகள் உள்ளது. ஆனால் அந்த வழிகளால் சிலருக்கு தீர்வு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.

இதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர். அந்த சோதனையில், நம் உடலில் உள்ள கொழுப்பு விநியோகம் 2 வகைகள் உள்ளது.

அவை ஆன்ராய்டு மற்றும் கைனாய்டு. ஆன்ராய்டு வகை கொழுப்பு வகையினர் ஆப்பிள் வடிவ உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள்.

கைனாய்டு வகை கொழுப்பு வகையினர் பேரிக்காய் வடிவ உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள். இதன் அடிப்படையில் உடல் பருமனை 6 வகைகளாக பிரிக்கின்றனர். அவைகள்,

மேல் உடல்(ஆன்ராய்டு)

இந்த வகையினர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதோடு, குறைவான உடற்பயிற்சியை செய்பவர்களாக இருப்பவர்கள். இவர்கள் இனிப்புக்களை முற்றிலும் தவிர்த்து, தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைக்கலாம்.

வயிற்றின் மையப் பகுதி(ஆன்ராய்டு)

வயிற்றின் மையப் பகுதியில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் கொண்டவராக இருப்பார்கள். இத்தகையவர்கள் வயிற்றுக் கொழுப்பை குறைப்பதற்கு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

கீழ் உடல்(கைனாய்டு)

பெண்களில் பெரும்பாலும் உடலின் கீழ் பகுதியில் கொழுப்புகள் சேரும் உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள். இத்தகையவர்கள் கால் பயிற்சிகளையும், கார்டியோவாஸ்குலர் பயிற்சிகளையும் மேற்கொள்வது நல்லது.

தொப்பை(ஆன்ராய்டு)

இந்த வகையினருக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கமும், சுவாச பிரச்சனையும் இருக்கும். இத்தகையவர்கள் மது அருந்துவதை தவிர்த்து, மூச்சு பயிற்சிகளை பின்பற்றினால் நல்ல பலனை பெறலாம்.

கீழ் உடல் மற்றும் கால்(கைனாய்டு)

இது போன்ற உடல் பருமன் கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கும். இவர்களுக்கு கால்கள் வீக்கமடையும். எனவே இத்தகையவர்கள் வாட்டர் ஏரோபிக்ஸ் மேற்கொள்வது மிகவும் நல்லது.

பெரிய தொப்பையுடன் வீங்கிய முதுகு(ஆன்ராய்டு)

இம்மாதிரியான கொழுப்புத் தேக்கம் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்களை அதிகம் பாதிக்கும். இத்தகையவர்கள் நீண்ட நேரம் பட்டினி இருக்காமல், தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்