தைராய்டு பிரச்சினையைத் தீர்க்கும் இந்துப்பு

Report Print Kavitha in ஆரோக்கியம்
124Shares

இந்துப்பு ஒருவகை பாறை உப்பான இதை ஆங்கிலத்தில் `ஹிமாலயன் ராக் சால்ட்’ என்கிறார்கள்.

இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மலைத்தொடர்களில் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றது.

இந்துப்பு வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களிலும் காணப்படுகிறது.

அயோடின் சத்து, லித்தியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் இயற்கையாகவே உள்ளன.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.

‘முக்குற்றம்’ எனப்படும் வாதம், பித்தம், கபத்தைப் போக்கும் சித்த மருந்துகளின் தயாரிப்பில் இயற்கை தாதுக்கள் நிறைந்த இந்துப்பு சேர்க்கப்படுகிறது.

இந்த இந்துப்பை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை பற்றி பார்ப்போம்.

  • குளிர்ச்சியூட்டும் தன்மையுள்ள இந்த உப்பு, பசியைத் தூண்டும்; மலத்தை இளக்கும் தன்மை கொண்டது.
  • இந்துப்பு பித்தத்தையும் கபத்தையும் சமன் செய்து சளி, இருமல் வராமல் தடுக்கும்.
  • செரிமான சக்தியை அதிகரித்துக் கண் பார்வை மற்றும் இதயத்தைப் பாதுகாக்கும் தன்மையும் கொண்டது.
  • இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.
  • மனச்சோர்வு போக்கும்.
  • உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைக்கவும் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும்.
  • குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவும்.
  • தைராய்டு பிரச்னையைத் தீர்க்க உதவுகின்றது.
  • சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகி டயாலிசிஸ் அல்லது சிறுநீரகத்தை மாற்றும் சூழலில் உள்ளவர்கள் இந்துப்பு சேர்த்துச் சமைத்த உணவைச் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள குறைபட்ட தாதுக்கள் அனைத்தும் இயல்பான அளவுக்கு வரும் மேலும் சிறுநீரகத்தின் இயக்கத்தை சீராக்குகின்றது.
  • இந்துப்பு கலந்த இளஞ்சூடான நீரால் வாய்க் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கிப் பல்வலி,, ஈறுவீக்கம் போன்றவை சரியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்