சேற்றுப்புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? எளிய மருத்துவம் இருக்கே

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

வேகமாகவும், விரைவாகவும் பரவக்கூடிய தொற்றுநோயான சேற்றுப்புண் ட்ரைகோபைத்தான் ரூபிரம் என்ற வைரஸால் ஏற்படுகிறது.

இதனால் பயம் இல்லை என்ற போதிலும், உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

மழைக்காலத்தின் போது, சேறு மற்றும் சகதிகளிலும் ஈரப்பாங்கான மண்ணில் அதிக நேரம் செருப்பணியாமல் வெறும் காலுடன் நிற்பதாலும் வரக்கூடும்.

இதற்கான மருத்துவம்,
  • காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.
  • கீழாநெல்லி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் ஐந்து நாட்கள் இரவில் தடவிவர சேற்றுப் புண் ஆறிவிடும்.
  • அரைக்கப்பட்ட மருதாணி இலை அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூள் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு வைத்தியங்கள் மூலம் இது குணப்படுத்தப்படலாம்.
  • பிதுக்கு மருந்து என அறியப்படும் சில வகைக் களிம்புகளை விரல் இடுக்குகளில் உள்ள சவ்வில் தேய்ப்பதாலும், புண்ணில் ஈரத்தன்மை அண்டாமல் பார்த்துக்கொள்வதாலும் இதை குணப்படுத்தலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்