இந்த டீயை குடியுங்கள்: அப்பறம் பாருங்க அற்புதத்தை

Report Print Printha in ஆரோக்கியம்

மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். அதே மஞ்சளை டீயாக தயாரித்துக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம்.

மஞ்சள் டீ தயாரிப்பது எப்படி?

2 கப் நீரை கொதிக்க வைத்து அதில் 1/2 இன்ச் அளவுள்ள மஞ்சள் கிழங்கு அல்லது 1 ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி ஆறியதும் அதில் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத் தூளை கலந்து குடிக்க வேண்டும்.

யாரெல்லாம் மஞ்சள் டீயை அதிகம் குடிக்கக் கூடாது?

குறைவான அழுத்தம் மற்றும் வேறு ஏதேனும் நோய் பாதிப்பு உள்ளவர்கள் மஞ்சள் டீயை அதிகமாக குடிக்கக் கூடாது.

சாதரணமாக ஒரு நாளைக்கு மஞ்சள் கிழங்கு என்றால் 1.5-3 கிராம் வரை சாப்பிடலாம். அதுவே மஞ்சள் பொடி எனில் 2 டீஸ்பூன் வரை எடுத்துக் கொள்ளலாம்.

நன்மைகள்
  • மஞ்சள் மற்றும் மிளகில் உள்ள ஆண்ட்டி-இன்ஃப்லமேட்டரி துகள்கள், இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் வராமல் தடுக்கிறது.
  • ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் மஞ்சள் டீ சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக உதவுகிறது.
  • ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகள் வராமல் தடுத்து, நம் உடலில் இருக்கும் செல்களின் செயல்பாட்டை சீராக்குகிறது.
  • மஞ்சளில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்டுகள் புற்று நோய்களின் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் பல்வேறு உறுப்புகளுக்கு பரவுவதை தடுக்கிறது.
  • குடலில் செரிமானத்திற்கு உதவுக்கூடிய பாக்டீரியாவின் வளர்சிக்கு மஞ்சள் டீ முக்கிய பங்காற்றுகிறது. இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
  • மஞ்சளில் இருக்கும் குர்குமின் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்கிறது.
  • கருவிழியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்து கண் பார்வையை சீராக்க உதவுகிறது. இதற்கு தினமும் ஒருமுறை மஞ்சள் டீயை குடித்து வர வேண்டும்.
  • மஞ்சள் டீ குடிப்பதால் மன அழுத்தம், காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி ஆகிய பிரச்சனைகள் குணமாவதோடு சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்