உடல் எடையை குறைக்கும் சப்போட்டா ஜூஸ்: எப்படி குடிக்க வேண்டும்?

Report Print Printha in ஆரோக்கியம்

இனிப்பு சுவையை கொண்ட சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இத்தகைய சத்துக்கள் நிறைந்த சப்போட்டா பழத்தின் ஜூஸை எப்படி செய்ய வேண்டும் அதன் நன்மைகளை என்னவென்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • சப்போட்டா - 6
  • பால் - 1/2 கப்
  • ஐஸ் கட்டிகள் - தேவையானவை
  • தேன் - சிறிதளவு
தயாரிப்பது எப்படி?

முதலில் பாலை நன்றாக காய்ச்சி குளிர வைத்து, சப்போட்டா பழத்தின் தோல் மற்றும் கொட்டையை நீக்கி பால், தேன், ஐஸ் கட்டிகள் ஆகியவை சேர்த்து நன்கு அரைத்தால் சப்போட்டா ஜூஸ் தயார்.

பயன்கள்

கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இந்த சப்போட்டா பழத்தின் ஜூஸை குடித்து வருவதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

சப்போட்டா பழம் சாப்பிடுவதன் நன்மைகள்
  • ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்கி, வாய்ப்புண், வயிற்று எரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
  • இதயம் தொடர்பான கோளாறுகள், துக்கமின்மை ஆகிய பிரச்சனையை தடுத்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது, அதோடு சருமமும் மிருதுவாக இருக்கும்.
  • நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிப்பினை தடுக்கிறது.
  • சப்போட்டா பழ ஜூஸுடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளி, பித்தம், வாந்தி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனையை போக்குகிறது.
  • 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறும் பிரச்சனை குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்