வயது முதிர்வை காட்டும் அறிகுறிகளை சரி செய்யும் உணவுகள்

Report Print Kabilan in ஆரோக்கியம்

நமது உடலுக்கு கனிம சத்தினை தருவது காப்பர் ஆகும். இதனை உணவுகளின் மூலமாகவே நாம் பெற முடியும். மேலும், நமது உடலுக்கு தினமும் 2 mg அளவிலான காப்பர் மிக அவசியம்.

அவ்வாறான உணவுகள் பற்றி இங்கு காண்போம்.

டார்க் சாக்லேட் மிகவும் சுவையுடன் இருப்பதுடன், இதன் ஒரு துண்டு 0.9mg அளவு காப்பர் சத்தைக் கொடுக்கும்.

ஒரு கப் காளானில் 0.43mg அளவிற்கு காப்பர் உள்ளதால், இது நமது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும். ஆனால், இதனை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் குறையும்.

பாதாம் பருப்பிலும் காப்பர் உள்ளது. கால் கப் பாதாமில் 0.4mg காப்பர் சத்து உள்ளது. இதில் நார்ச்சத்து உள்ளதால், புற்று நோய் வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்திகளை நமது உடலில் உருவாக்கும்.

கால் கப் சூரியகாந்தியில் விதையில் 0.63mg உள்ளதால், இது உடலுக்கு ஆரோக்கியத்தினைத் தருவதோடு, அழகையும் சேர்க்கிறது.

வறுக்கப்பட்ட முந்திரியை சாப்பிடும்போது பல வகையான ஊட்டச்சத்துகள் நமக்கு கிடைக்கிறது. ஒரு தேக்கரண்டி முந்திரியில் 0.191 அளவு காப்பர் சத்து உள்ளது.

மேலும், பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தமரைத்தண்டு, செல்மீன்கள் ஆகியவற்றிலும் காப்பர் சத்துகள் அதிக அளவில் உள்ளது. இவை ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களுக்கு சக்தியை அளிக்கும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காப்பர் உணவுகள் முகத்தில் உருவாகும் சுருக்கங்கள் மற்றும் வயது முதிர்வை காட்டும் அறிகுறிகளை சரி செய்யும். காப்பரில் கொலஜின் உள்ளதால், எலும்புகளை வலிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றும்.

மேலும், நீளமான அடர்த்தியான கூந்தலுக்கு காப்பரில் உள்ள ஊட்டச்சத்துகள் மிகவும் அவசியமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்