புரோட்டா பிரியரா நீங்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Report Print Kabilan in ஆரோக்கியம்
527Shares
527Shares
lankasrimarket.com

பரோட்டாவை விரும்பாதவர்கள் யாரும் இல்லை, ஆனால் மைதா உடலுக்கு ஏற்றதல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?

பல்வேறு நாடுகளில் மைதா மாவைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு தடை உள்ளது.

கோதுமையைப் பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊறவைத்து, பின்னர் குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் இட்டு மைதா பிரிக்கப்படுகிறது, கோதுமையை மாவாக அரைத்தால் மஞ்சள் நிறமாக இருக்கும்.

அந்நிறம் வெண்மையாக மாற பென்சாயில் பெராக்ஸைடு என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது.

இந்த ரசாயனம் தலைக்குப் பூசப்படும் சாயத்திலும் கலக்கப்படுவதால், மைதாவானது உடலில் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும்போது நீரிழிவு நோய் உண்டாகும்.

மேலும், மாவு மிகவும் மிருதுவாக இருக்க அலாக்சன் என்ற ரசாயனமும் கலக்கப்படுகிறது.

இதைத் தவிர, மைதாவில் குளோரின் டை ஆக்ஸைடு, பொட்டாசியம் புரோமைடு, அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரைட் ஆகியவையும் கலக்கப்படுகின்றன.

நிறம், சுவை, நெகிழ்வுத்தன்மை, மிருது போன்ற காரணங்களுக்கும், வாசனையூட்டவும், நீண்டநாள் கெடாமல் இருக்கவும் இவ்வளவு ரசாயனக் கலவைகள் சேர்த்து மைதா தயாரிக்கப்படுகிறது.

மைதா என்பது முளை நீக்கப்பட்ட, நார்ச்சத்தும் இல்லாத மிருதுவான பொருள் என்பதால் சத்துக் குறைவாகவே இருக்கும்.

இதில் விட்டமின் அளவு கொஞ்சமும் இல்லை, 78 சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது.

எனவே தான் சீறுநீரகங்களில் கல், இருதயக் கோளாறு, நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்