கேரட் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

Report Print Printha in ஆரோக்கியம்
393Shares
393Shares
lankasrimarket.com

கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், விட்டமின் A, C, K போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்களை தன்னுள்ளே உள்ளடக்கிய கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

கேரட் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா?

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள அனைத்து சத்துக்களும் நம் உடலில் சேரும்.

அதனால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து, உடல் எடையை விரைவில் குறைக்குமே தவிர, உடல் எடை அதிகரிக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • கேரட்டில் உள்ள விட்டமின் A கண்பார்வை திறனை அதிகரித்து, கண்புரை போன்ற கண் தொடர்பான கோளாறுகள் வராமல் பாதுகாக்கிறது.
  • ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்வதோடு குடல் புண்கள் மற்றும் வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கிறது.
  • கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.
  • பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை தொடர்பான கோளாறுகள் நீங்கி ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
  • கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடுவதன் மூலம் மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப நிலையிலே விடுபடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
  • கேரட்டில் உள்ள விட்டமின் A-விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையில் அழிக்கும் திறனை கொண்டது.
  • கேரட் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சரும சுருக்கத்தை நீக்கி, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • நீரிழிவு இருக்கும் போது கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இன்சுலினை சீராக்கி சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
  • தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால், குடலிறக்கத்தை சீராக செயல்பட செய்து, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்