தைராய்டால் உடல் எடை அதிகரித்து விட்டதா? இதை சாப்பிடாதீர்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் அதிக உடல் எடை, உடல் தளர்ச்சி, சோர்வு, அதிக தூக்கம், முடி உதிர்தல், மறதி, தலைவலி, கை, கால்கள் குளிர்ச்சி அடைதல், முறையற்ற மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் உண்டாகும்.

இந்த தைராய்டு பிரச்சனையால் அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

அதிகரிக்கும் எடையை குறைக்க சாப்பிடக் கூடாதவை?
  • ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
  • தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கோதுமை, பார்லி போன்ற குளூட்டான் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
  • பாஸ்ட் ஃபுட் உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகள், உட்கொண்ட உடனே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • தைராய்டு பிரச்சனை இருந்தால், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.
  • பச்சை வெங்காயம் தைராய்டு ஹைர்மோன்களின் உற்பத்தியைத் தூண்டும். எனவே பச்சை வெங்காயத்தை எப்போதும் சாப்பிடவே கூடாது.
  • காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன், உடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் தடுக்கும்.
  • இனிப்பு உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், அது உடலின் மெட்டபாலிசத்தை குறைத்து, உடல் பருமனை அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்