தக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்

Report Print Printha in ஆரோக்கியம்

தக்காளியில் அதிக வாசனையுள்ள இலைகளையும், நச்சுத்தன்மையுள்ள தண்டுகளையும் கொண்ட ஒரு செடியாக கருதப்பட்டதால், இதை தோட்டத்தில் அலங்காரச் செடியாக முதலில் வளர்க்கப்பட்டது.

அதன் பின் அந்த தக்காளி பழத்தில் எவ்வித ஆபத்தும் இல்லை, அதில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

தக்காளியின் நன்மைகள்
  • தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் விட்டமின் C நம் உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுத்து மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
  • சிகரெட் மற்றும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை தக்காளி பழம் குறைக்கிறது. அதோடு நுரையிரல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
  • தக்காளியில் உள்ள குளோரின், பொட்டாசியம், ஃபைபர் மற்றும் விட்டமின் C, இதயம் சீராக இயங்குவதற்கும், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது.
  • தக்காளியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், அது இன்சுலின் அளவையும், நம் உடலில் சேரும் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
  • தக்காளியில் உள்ள விட்டமின் A, பீட்டா கரோட்டீன் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் சூரிய ஒளியினால் ஏற்படும் நிற மாற்றங்களை சரிசெய்து, சருமத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • தக்காளியில் உள்ள ஃபோலிக் அமிலம், மன அழுத்தம், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகளை தடுத்து, சீரான தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • தக்காளியில் உள்ள விட்டமின் A கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இது ரெட்டீனாவின் செயல்பாடுகளுக்கு துணைபுரிந்து, கண் பார்வை பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதால், அது நாம் சாப்பிடும் உணவுகளின் செரிமானத்தை சீராக்கி, நம் உடலில் சேர்ந்திடும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
  • தக்களியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால், அதில் உள்ள நீர்ச்சத்து, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  • தக்காளியில் உள்ள Lycopene மற்றும் மக்னீசியம் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகமாக்கி, தைராய்டு சுரப்பியை சீராக்குகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்