கீரையை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

ஒவ்வொரு கீரைக்கும் பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தொடர்ந்து கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் பருமன் பிரச்சனை சரிசெய்யப்படுகிறது.

பொதுவாக, கீரைகளை காலை உணவுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது. குறிப்பாக முதியவர்களும், உடல் நலம் குன்றியவர்களும் கீரை உட்கொள்ள காலை நேரமே உகந்தது. கீரைகளை இரவு வேளையில் உண்ணக்கூடாது என்று ஒரு கருத்து உள்ளது.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் தினசரி உணவில் கீரை கட்டாயம் என்பதால் வேலைக்குச் செல்பவர்கள், வெளியில் உண்பவர்களால் காலை உணவில் கீரை சேர்ப்பது என்பது இயலாதது.

எனவே, இரவில் நேரமும், வாய்ப்பும் கிடைக்கும்பட்சத்தில் கீரை சாப்பிடுவதால் தவறு எதுவும் இல்லை.

இரவில் கீரை சேர்த்துக்கொள்ள நேரிடும்போது 8 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால், தாமதமாக இரவு 10 மணி, 11 மணிக்கு உண்பது பெரிய தவறு. இதனால் செரிமானக் கோளாறு உள்பட சில பிரச்னைகள் ஏற்படக் கூடும்.

அதேபோல் கீரையை சமைத்த வேளையிலேயே உட்கொள்ள வேண்டும். காலையில் சமைத்த கீரையை ஃப்ரிட்ஜில் வைத்து இரவு உட்கொள்வது தவறு.

இதனால் தேவையில்லாத வயிற்றுக் கோளாறு, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. இரவுக்கு புதிதாக வேண்டுமானால் சமைத்து சாப்பிடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers