சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தினை சாப்பிடலாமா?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

பேரீட்சையில் ஃப்ருக்டோஸ், சுர்கோஸ் மற்றும் குளூக்கோஸ் என இயற்கையான இனிப்பு கலந்திருக்கிறது.

இதனால் சர்க்கரை நோயாளிகள் பேரீட்சையை சாப்பிடலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆற்றலை தருகிறது.

நார்ச்சத்து நிறைந்துள்ள பேரீச்சம்பழத்தினை முறையான உணவுப்பழக்கத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடலாம்.

பேரீட்சை எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. இதில் எளிதாக கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது.

அதைத் தவிர,இரும்புச்சத்து, பொட்டாசியம் விட்டமின் பி, பி6,ஏ மற்றும் கே இருக்கின்றன. அதோடு டேனின், காப்பர், மக்னீசியம், நியாசின் இதில் அடங்கியுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் பேரீட்சையை தொடர்ந்து எடுத்து வந்தால் அதிலிருந்து க்ளுகோஸ் கிடைக்கும்.

பேரீட்சையில் இருக்கும் கொட்டையிலிருக்கும் சத்துக்கள் ரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

அதோடு இன்ஸுலின் சுரப்பையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்