வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டு சாப்பிடுங்கள்: நடக்கும் அதிசயம் இதோ

Report Print Raju Raju in ஆரோக்கியம்
504Shares
504Shares
ibctamil.com

தினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

இதற்கு முதலில், தேவையான அளவு பூண்டை நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு ஒருநாள் முழுக்க பூண்டு தேனில் ஊற செய்ய வேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது.

ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை இதை அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம், ஆனால் முதல் வேளை வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும்.

இதை சாப்பிடுவதால் பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும்.

பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். அதே போல பூண்டில் உள்ள அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால் இதயத்திற்குள் ரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது, அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து சத்துக்களாக மற்ற உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்யும் நிலையில், இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது.

உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லாமல் இருப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியடைகிறது. அதோடு இது நரம்புத் தளர்ச்சியையும் சரி செய்கிறது.

தேன் மற்றும் பூண்டு இரண்டிலுமே கொழுப்பை கரைக்ககூடிய ஆற்றல் உள்ளதால் நம் உடலுக்குள் சென்று தேவையில்லாத கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாரளமாக இதனைச் சாப்பிடலாம்.

தேனில் ஊறிய பூண்டினை சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும், இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும் இதனால் வயிறு மந்தமாக இருப்பது, சோர்வு,பசியின்மை போன்ற பிரச்சனைகளை இது தீர்த்திடும்.

<

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்