ஆரோக்கியமாக வாழ முன்னோர்கள் கையாண்ட சித்த மருத்துவம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழியாகும் ஆனால் இக்காலக்கட்டத்திலே நோய்கள் இன்றி எவரும் இல்லை. தலை முதல் கால் வரை உடல்களில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் நாம் இதுவரை கேட்டறிந்திராத பல புதிய நோய்கள் உருவாகிவிட்டன.

நமது முன்னோர்கள் அக்காலக்கட்டத்தில் சித்த மருத்துவங்களையே கடைப்பிடித்து நோயின்றி வாழ்ந்ததற்காக பல மருத்துவகுறிப்புக்கள் சான்றுகளாக இருந்தன. நாழும் இயன்றளவு நோயின்றி வாழ பழகுவோம்..

ஆரோக்கியமான வாழ்வை வாழ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த 10 வழிமுறைகள்

காய்ச்சல் தீர

நார்த்தங்காய் இலைகளை நன்றாக வேக வைத்து, அந்நீரைக் கசாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.

இளநரை மறைய

நெல்லி வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் இவைகளை இளமையில் நரை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் இளநரை மறையும் கருமுடி வளரும்.

ஞாபக சக்திக்கும், பல் உறுதிக்கும்

தினமும் ஒரு மாதுளம்பழத்தை சாப்பிட்டோ, அல்லது மூன்று வேளை உணவுகளிலும் கொஞ்சம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும், எலும்பு உறுதிப்படும், பற்கள் உறுதிப்படும்.

பேன் தொல்லை தீர

மலை வேம்பு மர இலையை நன்கு அரைத்து இருவேளை தலையில் பூசி குளித்து வர பேன் ஒழியும்.

கொழுப்பு குறைய

தினமும் நாம் உண்ணும் உணவில் பூண்டு, வெங்காயம்அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் தேவையற்ற கொழுப்பு குறையும்.

ஜீரண சக்திக்கு

உணவில் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்து உண்டு வர, மலச்சிக்கல் தீர்ந்து நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

வாய்ப்புண் குணமாக

மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை என்ற இவ்விரு கீரைகளையும் நன்கு சமைத்து சாப்பிட்டு வந்தால் இரண்டு நாளில் வாய்ப்புண் தீரும்.

மூக்கடைப்பு நீங்க

புதிதாய் மலர்ந்த புத்தம் புது ரோஜாப் பூவை நன்கு முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

வேர்க்குரு சரியாக

பப்பாளிக்காய் பாலை, வெங்காயச் சாறுடன் கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் வேர்க்குரு குணமாகும்.

நெஞ்சுவலி நீங்க

சுத்தமான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து, இதை நன்கு சுட வைத்த பின் கொஞ்சம் ஆறிய மிதமான சூட்டில் உள்ள இக்கலவையை நெஞ்சில் தடவினால் நெஞ்சுவலி குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers