வெங்காயத்தாள் தெரியுமா? இந்த புற்றுநோயை தடுக்குமாம்

Report Print Printha in ஆரோக்கியம்
146Shares

சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படும் வெங்காயத்தாளில் விட்டமின் A, B2, C, K, தயமின், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

இத்தகைய சத்துக்களை கொண்ட வெங்காயத்தாளை உணவுகளில் மற்றும் பிரியாணி போன்றும் செய்து சாப்பிடலாம்.

வெங்காயத்தாளின் நன்மைகள்
  • வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் மற்றும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
  • உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் இதயநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • கண் நோய் மற்றும் மற்ற கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுப்பதுடன், கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவுகளை குறைக்க உதவுகிறது.
  • வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து, ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரித்து சர்க்கரை நோயை தடுக்கிறது.
  • வெங்காயத்தாளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஹிஸ்டமின் எதிர்ப்பு, கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயை குணமாக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்