காலை உணவிற்கு முன் 1 டம்ளர் இதுல குடியுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

100 கிராம் கேரட்டில் 41 கலோரிகள், கார்போஹைட்ரேட்ஸ் 9 கிராம், சர்க்கரை 5 கிராம், நார்சத்து 3 கிராம், கொழுப்புச்சத்து 0.2 கிராம், புரோட்டின் 1 கிராம், பீட்டா கரோட்டின் - 77%, கால்சியம் - 3%, இரும்புச்சத்து - 5%, மங்கனீசு - 5%, பாஸ்பரஸ் - 5%, பொட்டாசியம் - 5%, சோடியம் 2.4 மிகி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

கேரட் ஜூஸ் குடிக்கும் முறை

கேரட்டை நீர் சேர்க்காமல் அரைத்து வடிகட்டி, அதை காலை உணவிற்கு முன் 30 மிலி குடிக்க வேண்டும். அப்படி குடிக்கும் போது, அதை வாயில் சில நொடிகள் வைத்து பின் விழுங்க வேண்டும்.

நன்மைகள்
  • நம் உடலில் தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, ஆர்த்ரிடிஸ், செரிமானம், வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் மற்றும் மூலநோய் போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • வெறும் வயிற்றில் கேரட் ஜூஸை குடிப்பதால், மன அழுத்தத்தால் ஏற்படும் மனச்சோர்வு பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கேரட் ஜூஸ் குடிப்பதால் சோர்ந்துள்ள இதய தசைகள் தளர்வடைவதுடன், உடல் எடையும் சீராகும்.
  • வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தில் இருந்து விடுபட, ஒரு டம்ளர் கேரட் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers