கருப்பு மிளகின் அற்புதம் தெரியுமா?

Report Print Printha in ஆரோக்கியம்

உணவில் காரம் மற்றும் சுவையை அதிகரிக்க உதவும் கருப்பு மிளகு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது.

மிளகை எப்படி பயன்படுத்த வேண்டும்?
  • மிளகில் உள்ள பப்பெரைன் மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். அதுவே மிளகை மஞ்சளுடன் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புற்றுநோயின் எதிர்ப்பு குணம் அதிகமாகும்.
  • 3 கிராம் மிளகு பொடியை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல், செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல் ஆகிய பிரச்சனைகள் நீங்கும்.
  • 1/2 கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குணமாகும்.
  • மிளகு, பெருங்காயம், ஆகியவற்றை பொடித்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர காய்ச்சல், குளிர் காய்ச்சல், யானைக்கால் காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
  • மிளகை புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி அதை வறுத்துப் பொடித்து அதில் 1/2 கிராம் பொடியை தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட வாயு, கபம், இருமல், ஆகியவை நீங்கும்.
  • மிளகு, சந்தனம், கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சொறி, சிரங்குகளின் மீது தடவி வந்தால் அது குணமாகும்.
  • மிளகுத்தூள், சிறிய வெங்காயம் மற்றும் 1/2 கிராம் உப்பு ஆகிய மூன்றையும் நன்றாக அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும்.
  • 10 மிளகுடன் 3 ஆடாதொடை இலையை சேர்த்து மை போல அரைத்து அதை உருட்டி தொடர்ந்து 45 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட இருமல் சரியாகும்.
  • மிளகை அரைத்து முகத்திற்கு தடவும் ஸ்க்ரப்புடன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கி, பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...