இருமல், காய்ச்சலுக்கு அகத்தியர் கண்டறிந்த அற்புத மூலிகை

Report Print Kavitha in ஆரோக்கியம்

கற்பூரவல்லி மருத்துவ மூலிகைச் செடியாகும், இதை ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ் என்ற பெயர்களைக் கொண்டும் அழைப்பார்.

முனிவர் அகத்தியரால் கற்பூரவல்லியின் பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கற்பூரவல்லியை இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் மற்றும் வியர்வை பெருக்கியாகவும், மார்புச்சளி, இருமல், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

மருத்துவகுணங்கள்
  • கற்பூரவல்லி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
  • கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பி நெற்றியில் பூச தலைவலி குணமாகும்.
  • கற்பூர வல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும்.
  • கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு,தொண்டைக் கம்மல் குணமாகும்.
  • கற்பூர வல்லி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி நீங்கும்.
  • கற்பூரவல்லியின் இலையை பறித்து உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் நன்றாக உணவு ஜீரணம் ஆகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers