21 நாட்கள் செவ்வாழைப்பழம்: என்ன பலன்?

Report Print Printha in ஆரோக்கியம்
269Shares
269Shares
lankasrimarket.com

செவ்வாழைப் பழத்தில் விட்டமின் C, பீட்டா கரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் குறைவான கலோரி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

எனவே தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ,

செவ்வாழைப் பழத்தின் நன்மைகள்
  • செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பல்வலி போன்ற பல் தொடர்புடைய நோய்கள் மற்றும் சொறி, சிரங்கு, வெடிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
  • செவ்வாழைப் பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளதால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வர, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • செவ்வாழைப் பழத்தில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் ரத்த சிவப்பணுக்களின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
  • தமனிகள் தடிமனாவதை தடுத்து, இருதய புற்றுநோயின் தாக்குதலில் இருந்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
  • சருமம், கண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் இப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
  • சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுப்பதுடன், உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை வலிமையாக்குகிறது.
  • சரும நோய் பிரச்சனை உள்ளவர்கள், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்