சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் பழங்கள்: தினமும் சாப்பிடுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
747Shares

இயற்கையான வழியில் சிறுநீரகக் கற்களை கரைத்து, அதனால் ஏற்படும் வலியை குணமாக்க சிட்ரஸ் பழங்கள் பெரிதும் உதவுகிறது.

சிறுநீரக் கற்கள் எப்படி உருவாகிறது?

கால்சியம் ஆக்ஸலெட் என்ற தாதுக்கள் நம் உடலில் சிறுநீரக் கற்களாக மாறுகிறது. அதுவும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறுநீரகக் கற்கள் உருவாகும். சிறுநீரகக் கற்கள் உருவாகும்.

எனவே சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் கீரைகள், ஆக்ஸலெட் உள்ள உணவுகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் தினசரி அதிகமாக நீரை குடிக்க வேண்டும்.

சிறுநீரகக் கற்களை கரைக்கும் பழங்கள் எது?

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலம் நிறைந்த சிட்ரஸ் பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.

அதோடு மட்டுமில்லாமல், உருவாகிய சிறுநீரகக் கற்களை கூட கரையச் செய்யும் ஆற்றல் சிட்ரஸ் பழங்களுக்கு உள்ளது.

சிட்ரஸ் பழங்களில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரேட் எனும் பொருள் சிறு நீரகக் கற்களை உருவாக்கும் கால்சியம் ஆக்ஸலேட்டைக் கரையச் செய்துவிடும் என்பது அமெரிக்க ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்